நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 2:42)

 உங்கள் அனைவர் மீதும் கர்த்தரின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக 

        பைபிள் - இன்று உலகில் வாழும் கோடி கணக்கான கிறித்தவர்களின் வேதபுத்தகம். தங்களின் அன்றாட வாழ்வில் எப்பொழுதும் தங்களுடன்  வைத்திருக்க விரும்பும் நூல், தேவாலயங்களில் வாசிக்கப்படும் கர்த்தரின் வேத வாக்கு,உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சிடப்படும் நூல் என்று பல சிறப்புகளை பெற்ற 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கிறித்தவர்களால் கர்த்தரின் கலப்பற்ற வேதம் என  நம்பப்பட்டு வரும் பைபிள் மனிதக் கரங்களால் மாற்றம் அடைந்து விட்டது என நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா? 


நிச்சயம் நம்பமாட்டீர்கள் ! என்ன ஆதாரம் என்று கேட்பீர்கள் ?

 இந்த கட்டுரையை வாசிக்கும் நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இங்கு நீங்கள் நடுநிலையோடு சிந்தித்து பாருங்கள்.நீங்கள்தான் நடுவர்கள் !. என் கருத்தில் ஏதேனும் குறைபாடு தோன்றினால் எனக்கு பின்னூட்டமிடுங்கள்.

பைபிள் மனித கரங்களால் அபத்தமாகிவிட்டது அல்லது மாற்றப்பட்டுவிட்டது  
ஆதாரம் 1 :
பைபிள் கூறும் சாட்சியம்:

 பைபிளின் கர்த்தர் கூறுகிறார் :

"How can you say, "We [the Jews] are wise, for we have the law of the LORD," when actually the lying pen of the scribes has handled it falsely?' (From the NIV Bible, Jeremiah 8:8)"

    நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி? மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்குகிறது. (எரேமியா 8:8 )
அன்புக்குரியவர்களே !   மனித கரங்கள் பிடித்த கள்ள எழுத்தாணி கர்த்தரின் வார்த்தையாகிய  வேதத்தை அபத்தமாக்குகிறது என்று பைபிளின் கர்த்தரே வாக்குமூலம் கொடுக்கிறார் பாருங்கள். நீங்கள் கிறித்தவராக இருந்தால் இந்த ஒரு ஆதாரம் போதுமானது ஏனெனில் நீங்கள்தான் பைபிள் - கர்த்தரின் வார்த்தை  என்று கூறுகிறீர்களே ! 

மேலும் மோசே உபகாமம் 31:25 -29 இல் லேவியரை பார்த்து பின்வருமாறு எச்சரிக்கிறார்.
    25. மோசே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரை நோக்கி:
    26. நீங்கள் இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை எடுத்து, அதை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்திலே வையுங்கள்; அங்கே அது உனக்கு விரோதமான சாட்சியாயிருக்கும்.
    27. நான் உன் கலகக்குணத்தையும் உன் கடினக் கழுத்தையும் அறிந்திருக்கிறேன்; இன்று நான் இன்னும் உங்களுடன் உயிரோடிருக்கையில்,கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணினீர்களே; என் மரணத்திற்குப்பின்பு எவ்வளவு அதிகமாய்க் கலகம்பண்ணுவீர்கள்!
    28. உங்கள் கோத்திரங்களிலுள்ள மூப்பர் உங்கள் அதிபதிகள் எல்லாருடைய காதுகளும் கேட்கத்தக்கதாக நான் இந்த வார்த்தைகளைச் சொல்லவும், அவர்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சிவைக்கவும் அவர்களை என்னிடத்தில் கூடிவரச்செய்யுங்கள்.
    29. என் மரணத்திற்குப்பின்பு நீங்கள் நிச்சயமாய் உங்களைக் கெடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியைவிட்டு விலகுவீர்கள்; ஆகையால், கடைசிநாட்களில் தீங்கு உங்களுக்கு நேரிடும்; உங்கள் கைக்கிரியைகளினாலே கர்த்தரைக் கோபப்படுத்தும்படிக்கு, அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வீர்கள் என்பதை அறிவேன் என்று சொல்லி,
    மேற்கண்ட வசனத்தில் இருந்து, தனது மரணத்திற்கு பின்பு இவர்கள் (யூதர்கள் ) வேதத்தில் தங்கள் கைவரிசையை காட்டிவிடுவார்கள்,மாற்றிவிடுவார்கள்  என்று மோசே எச்சரிக்கிறார்.
    மோசே எதை எச்சரித்தாரோ அதைத்தான்( யூதர்கள் வேதத்தில் தன் சொந்த சரக்கை சேர்ப்பார்கள் என்ற எச்சரிக்கையை ) அவருக்குபிறகு 826 ஆண்டுகள் கழித்து எழுதப்பெற்ற எரேமியா புத்தகம் (8 :8 ) உறுதிசெய்கிறது . 
    ஆதாரம் 2 :
    குர் ஆன் கூறும் சாட்சியம்:
    6:91இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை; ஏனெனில் அவர்கள், “அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை” என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்: “பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா கொண்டுவந்தாரே அந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள்; (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்.” (நபியே! மேலும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் (அதை இறக்கிவைத்தான்)” பின்பு அவர்களைத் தம் வீணான (தர்க்கத்)தில் விளையாடிக்கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக
    2:75(முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்
    2:79அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்
    3:78நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக; ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல; “அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது)” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல; இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள்
    5:13அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்; (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர்; எனவே நீர் அவர்களை மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
    அன்புக்குரியவர்களே! பைபிள் என்னும் வேதமானது பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மனித கரங்களினால் மாற்றத்திற்கு உள்ளானது என்பதை மேல் கண்ட இரு ஆதாரங்கள் மூலம் நாம் அறியலாம்.
    இவ்விரு ஆதாரங்களும்  மதம் என்னும் வட்டத்திற்குள் அமைந்த  ஆதாரங்களாகும், இவை தவிர்த்து உலகின் பிரபல செய்தி ஊடகங்களான CNN மற்றும் தி டைம்ஸ் வெளியிட்ட  பைபிளின் நிலை  குறித்த ஆதாரங்களையும் இங்கு சமர்பிப்பது நமது கடமையாகின்றது.
     ஆதாரம் 3 : 
    ஊடகங்கள் கூறும் சாட்சியம்:
     CNN ஊடகம் தெரிவிப்பதாவது:
    1 . சினாய் மலையின் பாலை வெளியில் கண்டெடுக்கப்பெற்ற 1600 வருடங்கள் பழமையான பைபிளின் கிரேக்க கையெழுத்து பிரதியான கோடெக்ஸ் சினைடிகிஸ்வுக்கும்   (codex sinaiticus ), தற்போது தேவாலயங்கள் பைபிள் என்று கூறும் தற்காலிக பைபிளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.
    உதாரணமாக சினாயின் கையெழுத்து பிரதியின் புதிய  ஏற்பாட்டில் பர்னபாஸ் சுவிசேசம்(Gospal Of Barnabas ) மற்றும் ஹேமாஸ் மேய்ப்பர் ( Hermas shepherd ) ஆகிய இரண்டு புத்தகங்கள் காணபடுகின்றன, ஆனால் இந்த  இரு புத்தகங்களும் தற்காலிக பைபிளில் காணபடுவதில்லை.மேலும் புரட்டஸ்டாண்டு கிறித்தவர்களின் பைபிளின் பழைய ஏற்பாட்டில் நீக்கப்பட்ட ஏழு ஆகமங்களும் இந்த கையெழுத்து பிரதியில் காணபடுகின்றன.
    2 .இந்த கையெழுத்து பிரதி எழுதப்பெற்ற நாளிலிருந்து  சுமார் 800 ஆண்டுகள் எண்ணிலடங்கா கையெழுத்து திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும்  அவை ஒரு எழுத்தில் தொடங்கி ஒரு வாக்கியம் வரை இடைசெருகல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த சினாய் கையெழுத்து பிரதியை இணையதளத்தில் வெளியிட்ட அறிஞர்கள் கூறுகின்றனர்.
    மேலும் விபரம் அறிய கீழ்காணும் சுட்டியை சொடுக்கவும் 
    http://articles.cnn.com/2009-07-06/world/ancient.bible.online_1_codex-sinaiticus-constantine-tischendorf-new-testament?_s=PM:வேர்ல்ட்
    அன்பு சகோதரர்களே !உலகின் பழமையான பிரதி இவ்வாறிருக்க நீங்கள் தற்போது கையில் கொண்டு உங்கள் நாவில் படிக்கும் பைபிளை நீங்கள் எவ்வாறு கர்த்தரின் வார்த்தை என்று கூறுகிறீர்கள். பைபிளானது கலப்பற்ற வேதம் என்று கூறும் நீங்கள் கலப்புள்ள வேதம் என்று நிரூபிக்கப்பட்ட  ஒன்றை தானே கர்த்தரின் வார்த்தை என்று தாங்கி பிடித்து கொண்டிருக்கிறீர்கள்.சிந்தியுங்கள் !
     
    அன்பு சகோதரர்களே! அறிவியல் முரண்பாடுகள் நிறைந்து கிடக்கும் ஓன்று எவ்வாறு கர்த்தரின் வார்த்தையாக இருக்க முடியும். திறந்த மனதுடன் சிந்தியுங்கள் !.
    மேலும் படிக்க : http://www.timesonline.co.uk/tol/news/world/europe/article574768.ece
    ஆதாரம் 5 :
    பகுத்தறிவு அளிக்கும் சாட்சியம்:
    அன்பு கிறித்தவ சகோததர்களே மேற்கூறிய நான்கு சாட்சியங்களிலும் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையெனில் இதோ நம்முள் இருக்கும் பகுத்தறிவு என்னும் ஐந்தாவது சாட்சியம் - பைபிளை அங்கொன்றும் இங்கொன்றும் படிக்காமல் நம் பகுத்தறிவுக்கு வேலை கொடுப்போம், பைபிளை முழுமையாக படிப்போம், வசனங்களை ஒப்பிட்டு படிப்போம். கூறப்படும் நிகழ்ச்சிகளை நிருபிக்கப்பட்ட அறிவியலுடன் ஒப்பிடுவோம், ஒரே வரலாறு கூறப்படும் இரண்டு புத்தகங்களை ஒப்பிடுவோம்.
    கர்த்தர் நாடினால் நீங்கள் ஆதியாகமத்தில் தொடங்கி வெளிபடுத்தின விசேஷத்தில் முடிக்கும் பொழுது பைபிள்- கர்த்தரின் வார்த்தை இல்லை என்பது உங்கள்  பகுத்தறிவுக்கு எட்டும்.
                                                                                                       இறையடியான் பாஸித்

0 comments: