| கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை மறைந்த போப் இரண்டாம் ஜான்பால் அவர்கள் ஒருமுறை வாடிகன் மைதானத்தில் ஆற்றிய உறையில் இவ்வாறு சொன்னார். IF THERE IS NO CRUCIFIXION, NO CHRISTIANITY. ஏசுவின் சிலுவை மரணம் மட்டும் இல்லையென்றால் கிருஸ்தவமே இல்லை என்றார். உண்மைதான், ஏசு உலக மக்களின் பாவங்களைக் கழுவுவதற்காக சிலுவையில் உயிர்நீத்தார். பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்ற கற்பனையில்தான் கிருஸ்தவ மதமே கட்டமைக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் அவதூறு என இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்-குர்ஆன் மிகத்தெளிவாகவே எச்சரிக்கிறது.
குர்ஆனுடைய உண்மை விளக்கத்தின்படி சுருங்கக்கூறினால் THERE WAS NO CRUCIFIXION, SO NO CHRISTIANITY அதாவது ஏசு சிலுவையில் மரணிக்கவில்லை, கிருஸ்தவம் என்பதும் இல்லை. இதை முஸ்லிம்களாகிய நாம் குர்ஆனிலிருந்து விளக்கினால் கிருஸ்தவர்கள் ஒப்புக்கொள்வார்களா?. எனவேதான் ஏசு சிலுவையில் மரணித்தார் என்பது உண்மையல்ல கற்பனை, கிருஸ்தவமே ஒரு மாயை என்பதை பைபிளிலிருந்தே சுட்டிக்காட்டுகிறோம் - இன்ஷா அல்லாஹ். கிருஸ்தவ நண்பர்கள் விருப்பு வெறுப்பின்றி ஆக்கத்தை முழுவதுமாக படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். காரணம் not to take things for granted.' - but "PROVE ALL THINGS!" (1 Thessalonians 5:21)எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.(தெசலோனிக்கேயர் 5:21) என்று பைபிள் கூறுகிறது. எனவே பைபிளை இறைவேதமாக நம்பும் ஒவ்வொரு கிருஸ்தவ அன்பர்களும் எங்கள் மீது கோபப்படாமல் சங்கைக்குரிய ஏசுபிரான் சிலுவையில் உயிர்நீத்தாரா? கிருத்தவ மதம் உண்மையா? என்ற சற்று நிதானத்துடன் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளார்கள். யோனாவின் அற்புதமே ஏசுவின் அற்புதம். ஏசு என்ற நபி ஈஸா (அலை) அவர்கள் தீனுஸ் இஸ்லாம் என்ற ஓரிறைக் கொள்கையை இஸ்ரவேலர்களாகிய யூதர்களிடம் பிரச்சாரம் செய்தபோது யூதர்கள் தொடர்ந்து மறுத்தனர். நபி ஏசு (அலை) அவர்கள் இறைகட்டளைபடி பல அற்புதங்களை செய்துகாட்டியும் அந்த யூதர்கள் நபி ஏசு (அலை) அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக ஒரு அத்தாட்சியை, அற்புதத்தை நபி ஏசு (அலை) அவர்களிடம் கேட்டனர். இதை மத்தேயு தான் எழுதிய சுவிசேஷத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். "MASTER, WE WOULD SEE A SIGN FROM THEE". (Matthew 12:38). அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். (மத்தேயு 12:38) இதைக் கேட்ட ஏசு அவர்கள் கோபத்துடன் ஒரு பதிலைக் கூறியதாக பைபில் கூறுகிறது. அது என்ன பதில் கீழே பார்வையிடுங்கள். "AN EVIL AND ADULTEROUS GENERATION SEEKETH AFTER A SIGN; AND THERE SHALL NO SIGN (no miracle) BE GIVEN TO IT, BUT THE SIGN (miracle) OF THE PROPHET JONAS: FOR AS JONAS WAS THREE DAYS AND THREE NIGHTS IN THE WHALE'S BELLY; SO SHALL THE SON OF MAN BE THREE DAYS AND THREE NIGHTS IN THE HEART OF THE EARTH." (Matthew 12:39-40). அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். (மத்தேயு 12:39-40). இதில் மூன்று விஷயங்கள் கவனிக்கப்படவேண்டும். 1) விபச்சார சந்ததியார் என்று ஏசு கோபப்படும் அளவிற்கு அந்த யூதர்கள் மோசமான முறையில் நடந்திருக்கவேண்டும். (இன்று இணையங்களில் இஸ்லாத்தைத் தூற்றுபவர்களைக் கூட நாம் இவ்வாறு பழிக்கவில்லை). காரணம் யூதர்கள் இறைச் செய்தியை ஏற்றுக் கொள்ளாமல் இறைத்தூதர்களைப் புறக்கணித்ததாலும், இறைத்தூதர்களை கொலை செய்ததாலும், இறை வேதங்களில் தங்கள் சுய கருத்துக்களை புகுத்தி அதில் கலப்படம் செய்ததினாலேயே ஏசுவால் இவ்வாறு பழிக்கப்பட்டனர். (அன்று ஏசுவால் பழிக்கப்பட்ட யூதர்கள் இன்று கிருஸ்தவர்களுக்கு நெருங்கிய கூட்டாளிகள் என்பது வேறுவிஷயம்). 2) ஏசுவிடம் யூதர்கள் அத்தாட்சியைக் கேட்டபோது நான் பிறவிக்குருடை போக்கவில்லையா? தண்ணீரை மதுவாக மாற்றிக்காட்டவில்லையா? (யோவான் 2:9) என்றெல்லாம் அவர்களிடம் வினா எழுப்பவில்லை. மாறாக யோனாவின் அத்தாட்சி மட்டுமே என்னுடைய அற்புதம்/அத்தாட்சி என்று ஏசு ஒரே வரியில் பதில் சொல்கிறார். THERE SHALL NO SIGN (no miracle) BE GIVEN TO IT, BUT THE SIGN (miracle) OF THE PROPHET JONAS ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. 3) யோனாவின் அத்தாட்சியே என்னுடைய அத்தாட்சி என்ற இந்த வார்த்தையை வைத்துக்கொண்டுதான், ஏசு உலகமக்களின் பாவங்களுக்காக சிலுவையில் உயிர் நீத்தார், பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். மூன்று நாட்கள் மரணத்திற்குப் பிறகு அதிசய உயிர்த்தெழுந்ததின் காரணமாக ஏசு யோனாவைப் போன்றவர் ஆகிறார் என்று ஏசுவின் சிலுவை மரணத்தை கிருத்துவர்கள் நிறுவுகின்றனர். ஏசு யோனாவைப் போன்றவரா? ஏசு சிலுவையில் உயர்நீத்தாரா? என்பதை பார்ப்போம். அது என்ன யோனாவின் அற்புதம்? யோனா என்ற நபி யூனுஸ் (அலை) அவர்களின் அத்தாட்சியை பற்றி விளங்குவதற்கு முன்னால். பைபிள் கூறும் நபி யோனா (அலை)அவர்களின் சரித்திரத்தை நினைவு கூறவேண்டும். இச்சரித்திரங்கள் ஒவ்வொரு முஸ்லிம், கிருஸ்தவ மற்றும் யூதக்குழந்தைகளுக்கும் தெரியும். அதுதான் JONAH ON THE WHALE மீன் வயிற்றில் தீர்க்கதரிசி யோனா. இறைவன் நபி யோனா (அலை) அவர்களை நினேவா (அல்லது நினிவா) நகரை நோக்கி இறைப்பிரச்சாரப் பணி செய்யுமாறும், நினேவா நகர் மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுமாரும் கட்டளையிட்டான். ஆனால் நபி யோனா (அலை)அவர்களோ, இறைகட்டளைபடி நினேவா நகருக்கு செல்லாமல் ஜாப்பா என்ற ஊருக்கு படகில் பயணம் சென்றார்கள். அவ்வாறு நடுக்கடலில் படகு சென்று கொண்டிருந்தபோது கடல் கொந்தளிக்கின்றது. அன்றைய மீனவர்களின் மூடநம்பிக்கைபடி இறைவனுக்கு குற்றமிழைத்த நிலையில் எவரும் கடல்பிரயாணம் செய்தால் கடல் கொந்தளிக்கும் என்று நம்பினர். அப்படி கடல் கொந்தளிக்கும் போது அந்த குற்றவாளியை கடலில் வீசி எறியவில்லையெனில் கடல் அலையின் சீற்றத்தால் அப்படகில் பிரயாணம் செய்யும் அனைவரும் அழிவர் என்பது அவர்களுடைய நம்பிக்கையாகும். மக்களோடு மக்களாக ஜாப்பா நோக்கி நபி யோனா (அலை)அவர்கள் பிரயாணம் செய்த அந்த நாளிலும் அவ்வாறு கடல் கொந்தளித்தது. எனவே படகிலிருந்த அம்மீனவர்கள் குற்றமிழைத்தவரை கண்டுபிடிக்கும் முறையாக அவர்கள் நம்பியிருந்த (LOT SYSTEM ) சீட்டுக்குலுக்கள் முறைப்படி (அல்லது பகடைமுறைப்படி) சீட்டுப்போடவே, நபி யோனா (அலை)அவர்களின் பெயரே வந்தது. “THAT WE MAY KNOW FOR WHOSE CAUSE THIS EVIL IS UPON US. SO THEY CAST LOTS, AND THE LOT FELL UPON JONAH." (Jonah 1:7). அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள். யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது. (யோனா 1:7) "AND HE SAID UNTO THEM TAKE ME UP, AND CAST ME FORTH INTO THE SEA; SO SHALL THE SEA BE CALM UNTO YOU: FOR I KNOW THAT FOR MY SAKE THIS GREAT TEMPEST IS UPON YOU."(Jonah 1:12) அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டு விடுங்கள். அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும் என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான். (யோனா 1:12) நபி யோனா (அலை)அவர்களும் தானே குற்றவாளி என்றும், இறைகட்டளைக்கு மாறுசெய்துவிட்டேன் என்றும் ஒப்புக்கொண்டு நடுக்கடலில் குதிக்க தயாரானார்கள். அவ்வாறு நடுக்கடலில் போடப்பட்ட நபி யோனா (அலை)அவர்களை ஒரு மிகப்பெரும் மீன் விழுங்கியது. மூன்று நாட்கள் மீன் வயிற்றில் உயிரோடு தங்கிய நபி யோனா (அலை)அவர்கள் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடினார்கள். பின்னர் அந்த திமிங்கலம் மீன் நபி யோனா (அலை)அவர்களை கடற்கரையில் உயிரோடு உமிழ்ந்தது. இதுதான் நபி யோனா (அலை)அவர்களின் மூன்றுநாட்கள் மீன்வயிற்றில் உயிரோடு தங்கிய அற்புத சரித்திரம். யோன உயிரோடிருந்தார்களா? மரணித்தார்களா? இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் நபி யோனா (அலை)அவர்கள் தங்களின் குற்றத்தை தானாகவே முன்வந்து ஒப்புக்கொண்டபடியால் மீனவர்கள் அவர்களின் கைகால்களை கட்டி துன்புறுத்தி குற்றுயிராக்கி கடலில் வீசி எறியவில்லை. மாறாக எந்த நிலையில் படகில் ஏறினார்களோ அதே உடல் நலத்துடனே கடலில் எறிப்படுகிறார்கள். அவ்வாறு கடலில் போடப்படும் போது நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? – உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில். அவ்வாறு வீசப்பட்ட நபி யோனா (அலை)அவர்களை அந்த மீன் முழுமையாக விழுங்கியது. மீனுக்கு ஒரு இரை கிடைத்தால் பற்களால் கடித்து குதறி விழுங்கும். அம்மீன் நபி யோனா (அலை)அவர்களை அவ்வாறு செய்யவில்லை. காரணம் அவ்வாறு கடித்து குதறி நபி யோனா (அலை)அவர்கள் மரணித்திருந்தால் அதற்குப் பெயர் அற்புதமல்ல. எனவே அம்மீன் இறைக் கட்டளைபடி நபி யோனா (அலை)அவர்களை முழுவதுமாக விழுங்கியது. இப்போது நாம் கேட்கிறோம், இவ்வாறு அந்த மீன் விழுங்கும் நிலையில் நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? – உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில். "JONAH PRAYED UNTO THE LORD HIS GOD OUT OF THE FISH'S BELLY?" (Jonah 2:1). அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: (யோனா 2:1). இவ்வாறு மீனால் விழுங்கப்பட்ட நபி யோனா (அலை)அவர்கள் மூன்று நாட்கள் மீன் வயிற்றில் தங்கினார்கள். இறைவனிடம் பிரார்த்தனையும் செய்ததாக மேற்கண்ட பைபிள் வசனம் கூறுகிறது. மரணமடைந்து விட்ட ஒரு மனிதன், இறைவனிடம் பிரார்த்திக்க முடியுமா? அல்லது தன்னுடைய குற்றத்தை வருந்தி அழுது புலம்பத்தான் இயலுமா? இப்போது சொல்லுங்கள் மீன் வயிற்றில் மூன்று நாட்கள் நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? – உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில். மூன்றாம் நாள் அந்த மீன் இறைக்கட்டளை படி நபி யோனா (அலை) அவர்களை கடற்கரையில் உமிழ்ந்தது. அவ்வாறு உமிழ்ந்தபோது நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? – உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில். இவ்வாறு நபி யோனா (அலை) அவர் அந்த மூன்னு நாட்களும் Alive! Alive!! Alive!!! உயிரோடு இருந்தார்கள்! உயிரோடு இருந்தார்கள்!! உயிரோடு இருந்தார்கள்!!! என்பது இவ்வரலாற்றைப் படிக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தெரியும். யோனாவைப் போல் ஏசு இல்லை கிருஸ்தவ நண்பர்களே இப்போது சற்று சிந்தியுங்கள் "AS JONAH WAS ..... SO SHALL THE SON OF MAN BE" LIKE JONAH யோனா இருந்தததைப் போல்...மனுஷகுமாரனாகிய நானும் அதாவது யோனாவைப் போல என்று ஏசு கூறியதாக பைபிள் கூறுகிறது. 1. தீர்க்கதரிசி யோனா அவர்கள் படகிலிருந்து தூக்கி கடலில் இறக்கப்பட்டபோது அவர் உயிரோடு இருந்தார். 2. மீன் யோனாவை விழுங்கியயோதும் அவர் உயிரோடே இருந்தார். 3. மூன்று நாட்கள் யோனா மீன் வயிற்றில் இருந்தபோதும் அவர் உயிருடன்தான் இருந்தார். 4. மீன் அவரை கடற்கரையில் உமிழ்ந்த போதும் அவர் உயிருடன்தான் இருந்தார். ஆனால் கிருஸ்தவர்களின் நம்பிக்கையைப் பாருங்கள். சங்கைக்குரிய தீர்க்கதரிசி ஏசுவை யூதர்கள் பிடித்து சிலுவையில் அறைந்ததாகவும், அவர் உலக மக்களின் பாவங்களை நீக்குவதற்காக சிலுவையில் உயிர்நீத்தாகவும் கிருஸ்துவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு மரணித்த ஏசு மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிர்த்தெழுந்தார் என்பதும் கிருஸ்தவர்களின் நம்பிக்கை. தீர்க்கதரிசி யோனா 3 நாட்கள் உயிருடன் இருந்தார் என்று பைபிள் சொல்கிறது. யோனாவைப் போலத்தான் ஏசுவும் என்றும் கூறுகிறது. ஆனால் தீர்க்கதரிசி ஏசுவோ 3 நாட்கள் மரணித்துவிட்டதாக கிருஸ்தவர்கள் சொல்கிறார்கள். இந்த முரண்பாட்டின் மூலம் ஏசு, யோனாவைப் போல் அல்ல என்று நிரூபனமாகிவிட்டது. ஏசு, யோனாவைப் போல இல்லை என்று ஒப்புக்கொள்வதைத் தவிர இங்கு வேறு வழியுமில்லை. எனவே கிருஸ்தவர்கள் ஏசு உண்மை தீர்க்கதரிசி இல்லை என்ற முடிவிற்கு வரவேண்டும் அல்லது ஏசு சிலுவையில் அறையப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இந்த இரண்டு நிலையில் எதை ஒப்புக்கொண்டாலும் கிருஸ்தவம் என்பது ஒரு மாயை, ஏசுவின் சிலுவை மரணம் நடைபெறவில்லை என்ற உண்மை வெட்ட வெளிச்சமாகும். இதைத்தான் அருள்மறை திருக்குர்ஆன் 4:157,158 வசனங்களில் தெளிவு படுத்துகிறது. கிருஸ்தவர்கள் தேவகுமாரராக நம்பிக் கொண்டிருக்கும் ஏசு, யோனாவைப் போல இல்லை என்ற உண்மை கிருஸ்தவ மத கோட்பாட்டிற்கும், கிருஸ்தவ திருச்சபைகளுக்கும் விழுந்த பேரடியாக இருப்பதால், இதற்கு ஏதாவது சப்பைக் கட்டுகட்டி, பூசி மெழுகி, ஏசு சிலுவையில் மரணித்தார் என்பதை நிரூபிப்பதற்காக கிருத்தவச் திருச்சபைகள் சில குறுக்கு வழியை யோசித்தனர். அதன்படி மத்தேயு 12:39-40 வசனங்களை (வழக்கம்போல) திரித்தனர். FOR AS JONAS WAS THREE DAYS AND THREE NIGHTS IN THE WHALE'S BELLY; SO SHALL THE SON OF MAN BE THREE DAYS AND THREE NIGHTS IN THE HEART OF THE EARTH இதில் THREEஎன்று நான்கு முறை வந்துள்ளது எனவே 'மத்தேயு 12:39-40 வசனங்கள் ஏசு, யோனாவைப் போல் என்ற கருத்தைப் போதிக்கவில்லை மாறாக TIME FACTOR அது மூன்று நாட்கள் என்ற கால அளவைத்தான் குறிக்கிறது என்கின்றனர். அதாவது தீர்க்கதரிசி யோனா 3 நாட்கள் மீன் வயிற்றில் இருந்ததைப் போல, சிலுவையில் மரணித்த ஏசு 3 நாட்கள் பிணஅறையில்(sepulcher) இருந்தார் என்று கூறுகிறார்கள். இதிலும் கிருஸ்தவர்களுக்கு தோல்வியே கிடைக்கிறது. ஏசு மூன்று நாட்களா பிணஅறையில் இருந்தார்? பைபிளை படித்த கிருஸ்தவ நண்பர்களிடம் ஏசு சிலுவையில் அறையப்பட்டது எப்போது? எந்தக்கிழமையில்? என்று வினவுங்கள். அது வெள்ளிக்கிழமை மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்கு முன்னர் என்பார்கள். நியூஜிலாந்திலிருந்து அமெரிக்காவரை, ஆஸ்திரேலியா முதல் ஐரோப்பா வரை அனைத்து கிருஸ்த்தவ நாடுகளும் ஒத்துக்கொண்ட ஒரு விஷயம்;. அதனால்தான் ஈஸ்டர் பண்டிகை என்ற GOOD FRIDAY புனித வெள்ளியை கிருஸ்தவர்கள் அனுஷ்டிக்கின்றனர். சரி அப்படி சிலுவையில் மரணமடைந்த ஏசு எப்போது உயிர்த்தெழுந்தார் எனக் கேட்டால் மூன்றாம் நாள் ஞாயிறு காலை சூரியன் உதிக்கும்முன் என்று பதிலளிப்பர். காரணம் ஞாயிற்றுக் கிழமை (வாரத்தின் முதல் நாள்) சூரியன் உதயமாகும் முன் மேரிமெக்டலின் ஏசு வைக்கப்பட்டிருந்த பிணஅறையை (Tomb) பார்த்தார், பிணஅறை (Tomb) காலியாக இருந்தது. We must not forget that the Gospels are explicit in telling us that it was "before sunrise" on Sunday morning (the FIRST day of the week), that Mary Magdalene went to the tomb of Jesus and found it empty. யூதர்களின் நம்பிக்கைபடி பாவம் செய்தவர்களையும், குற்றம் இழைத்தவர்களையும் சிலுவையிலேற்றிக் கொள்வர். காரணம் அந்த பாவி மரண வேதனையை நீண்ட நேரம் சுவைக்க வேண்டும் என்பதற்காக. சிலுவையில் அறையப்பட்ட ஒருவரின் உடலிலிருந்து குருதிகள் அனைத்தும் வெளியேறி உயிர் பிறிவதற்கு குறைந்தது 5 முதல் 6 மணி நேரங்களாவது ஆகும். யூதர்களின் பார்வையில் அன்று ஏசு சாபத்திற்குள்ளானவர். அடுத்தநாள் சனிக்கிழமை யூதர்களின் புனித நாளாக இருந்ததால் வெள்ளிக்கிழமை மாலையே அவசர அவசரமாக ஏசு சிலுவையில் அறையப்படுகிறார். எனினும் கிருத்துவர்களின் நம்பிக்கைப்படி ஏசுவின் உடல் மூன்று நாட்கள் பிண அறையில் (வழஅடி) இருந்ததா என்பதை பார்ப்போம்.
வெள்ளிக்கிழமை மாலைதான் (சூரியன் மறையும் முன்னர்) ஏசு சிலுவையில் அறையப்படுகிறார் எனவே வெள்ளிக்கிழமை காலை அவர் உடல் பிணஅறையில் இருந்ததற்கு சாத்தியமில்லை. அன்று வெள்ளி இரவு பிணஅறையில் அவர் உடல் இருந்திருக்கலாம். அடுத்தநாள் சனிக்கிழமை காலையும், அன்று இரவும் ஏசுவின் உடல் பிணஅறையில் இருந்திருக்கலாம். அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை காலை சூரியன் உதயமாவதற்கு முன்னர் மேரிமெக்டலின் பிணஅறையைப் பார்த்தார் அதுகாலியாக இருந்தது. எனவே இது வரை ஒரு பகலும் இரண்டு இரவுகளும் பிண அறையில் ஏசுவின் உடல் இருந்திருக்கிறது. இந்நிலையில் தீர்க்கதரிசி யோனா 3 நாட்கள் மீன் வயிற்றில் இருந்ததைப் போல, சிலுவையில் மரணித்த ஏசு 3 நாட்கள் பிணஅறையில் (Tomb) இருந்தார் என கிருத்துவ திருச்சபைகள் அப்பாவி கிருஸ்தவர்களின் காதில் பூசுற்றியது என்னாயிற்று? JONAS WAS THREE DAYS AND THREE NIGHTS IN THE WHALE'S BELLY; யோனா 3 பகலும் 3 இரவுகளும் மீன்வயிற்றில் இருந்தார். ஆனால் ஏசுவோ 1 பகலும் 2 இரவுகள் மட்டும்தானே பிணஅறையில் (வழஅடி) இருந்துள்ளார்? 3 பகல் 3 இரவுகளும், 1 பகல் 2 இரவுகளும் சமமாகுமா? IS 3+3 and 1+2 are equal ? 3 +3 ம், 1 +2 ம் சமமாகுமா? அணுவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனோ அல்லது கணிதமேதை இராமானுஜமோ வந்தால்கூட இதை சமப்படுத்தி காட்ட இயலாது. எனவே யோனாவைப் போல ஏசு உயிரோடு இருக்கவில்லை என்று முன்னர் நிரூபனமாகியதைப் போல, இப்போது (TIME FACTOR)மூன்று நாட்கள் என்ற கால அளவைத்தான் குறிக்கிறது என்று கூற்றும் பொய்யாகி விட்டது. இதை உணர்ந்து கொண்ட ராபர்ட் பஹே என்ற கிருஸ்தவ அறிஞர் ஏசு வெள்ளியன்று சிலுவையில் அறையப்படவில்லை மாறாக புதன் கிழமைதான் சிலுவையில் அறையப்பட்டிருக்க வேண்டும் என்றார். இதை டர்பன் (South Africa-Durban) நகரிலுள்ள ஹோலிடே இன் (Holiday Inn) நட்சத்திர ஹோட்டலில் கருந்தரங்கமாக நடத்தியது மட்டுமல்லாது இக்கருத்தை ப்லைன் ட்ரூத் (Plain Truth) இதழிலும் வெளியிட்டார். காரணம் வெள்ளிக் கிழமையிலிருந்து கணக்கிட்டால் 3 பகல் 3 இரவுகள் வரவில்லை என்பதால் அவர் புதன் இரவிலிருந்து கணக்கிடச் சொன்னார். என்ன விளையாட்டு இது? கடந்த 2000 வருடங்களாக புனித வெள்ளி, புனித வெள்ளி என்று கூப்பாடு போடுவது வெற்றுக்கூச்சலா என்று கேட்கத் தோன்றுகிறது. பைபிள் பழைய ஏற்பாட்டின் 300க்கும் மேற்பட்ட தூத்துச் செய்திகள் ஏசு சிலவையில் அறையப்பட்ட புனித வெள்ளியன்றுதான் பரிபூரனமானது என்ற கிருத்தவ நம்பிக்கை என்ன ஆயிற்று? இவ்வுலகின் 200 கோடி கிருஸ்தவர்களும் தங்கள் மதத்தின் அஸ்திவாரமாக நம்பும் தங்கள் கடவுளின் சிலுவை மரணத்தைப் பற்றிய 2000 வருடங்கள் அறியாமையை வெளிக்கொண்டு வந்ததற்கு ராபர்ட் பஹே அவர்களை ஒரு வகையில் பாராட்டத்தான் வேண்டும். அறிஞர்ராபர்ட் பஹேயின் ஆய்வின்படி புனித வெள்ளி என்பதல்ல புனித புதன என்பதே கிருத்துவர்களின் புனித நாள். ஈஸ்டர் பண்டிகை, புனித வெள்ளி என்று கிருஸ்தவர்களை கடந்த 2000 வருடங்களாக சைத்தான் வழிகெடுத்து விட்டானா? ஆகையால் மக்களே! கிருஸ்தவர்கள் யாரை தேவகுமாரன் என்று நினைத்துக் கொண்டும், அவர் சிலுவையில் மரணித்தார் என்றும் நம்புகிறார்களோ அவருக்கும் அல்லாஹ்வின் சங்கை மிக்க இறைத்தூதர்களின் ஒருவரான ஏசு என்ற ஈஸா (அலை) அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் ஏசு என்ற ஈஸா (அலை) அவர்கள் இறைவனோ அல்லது தேவகுமாரரோ அல்ல மாறாக இறைவனின் கண்ணியத்திற்குரிய இறைத்தூதர்களில் ஒருவராவார். ஏசு என்ற ஈஸா (அலை) அவர்களை எவரும் கொல்லவுமில்லை, சிலுவையில் அறையவுமில்லை. அந்த யூதர்களுக்கு நபி ஈஸா (அலை) அவர்களைப் போன்ற ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. அல்லாஹ் அவர்களை தன் அளவில் உயர்த்திக் கொண்டான். இதுவே சத்தியமான உண்மை. இதை விசுவாசங்கொண்டு அல்லாஹ்வை மட்டும் வணங்கத் தகுதியான ஒரே கடவுளாகவும், நபி முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் இறுதித்தூதராகவும், பரிசுத்த குர்ஆனை இறைவனின் இறுதி வேதமாகவும் நம்பி, தூய இஸ்லாத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளாததுவரை எந்த கிருஸ்தவருக்கும் பரலோக ராஜ்யத்தில் வெற்றியுமில்லை, ஈடேற்றமுமில்லை. கிருஸ்தவ நண்பர்கள் இனியாவது சிந்திப்பார்களா? நன்றி- இஸ்லாமிய இணைய பேரவை | ||||||||||||||||||||||
by அபூ ஷபீக் | 11:16 AM in | comments (0)
இஸ்லாம் பெண்களை இழிவுப்படுத்துகிறதா? பாகம்-1
திருக்குர்ஆனும், பெண்களும்.
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருமறைக் குர்ஆன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்ணுரிமையைப் பேணினார்கள். பெண்களின் கண்ணியத்தை உயர்த்தினார்கள்.
அத்தகைய திருக்குர்ஆன் வசனங்கள் சிலவற்றைக் கீழே தந்துள்ளோம்.
ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 2:228)
அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை.
(திருக்குர்ஆன் 2:187)
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
(திருக்குர்ஆன் 4:1)
(திருக்குர்ஆன் 4:1)
பொருள் திரட்டும் உரிமை
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:32)
கல்வி கற்றல் கற்பித்தல்
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
(திருக்குர்ஆன் 9:71)
(திருக்குர்ஆன் 9:71)
சொத்துரிமை
குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை. (திருக்குர்ஆன் 4:7)
உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (திருக்குர்ஆன் 4:12)
இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. இறந்தவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
(திருக்குர்ஆன் 4:11)
(திருக்குர்ஆன் 4:11)
பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும் போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் (அவள் இறக்கும் போது) அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழி தவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன்.
(திருக்குர்ஆன் 4:176)
(திருக்குர்ஆன் 4:176)
மணமகனைத் தேர்வு செய்யும் உரிமை
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.
(திருக்குர்ஆன் 4:19)
(திருக்குர்ஆன் 4:19)
திருமணக் கொடை (மஹர்)
பெண்களுக்கு ஆண்கள் மஹர் வழங்குதல் கட்டாயம் –
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (திருக்குர்ஆன் 4:4)
உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மண முடிக்க விலக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 424)
இன்றைய தினம் தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்பு நெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தனது நம்பிக்கையை (இறை) மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார். (திருக்குர்ஆன் 5:5)
எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர் என்று அவர் கூறினார்.
(திருக்குர்ஆன் 28:27)
(திருக்குர்ஆன் 28:27)
மஹரை விட்டுத் தரும் உரிமை மனைவிக்கு உண்டு
அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:237)
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (திருக்குர்ஆன் 4:4)
மஹரைத் திரும்பக் கொடுக்கத் தேவை இல்லை
ஒரு மனைவியை விவாகரத்துச் செய்து, இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா?
(திருக்குர்ஆன் 4:20)
(திருக்குர்ஆன் 4:20)
உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்? (திருக்குர்ஆன் 4:21)
பெண்களுக்குக் கொடுத்த மஹரை எக்காரணம் கொண்டும் திரும்பக் கேட்க முடியாது. இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.
(திருக்குர்ஆன் 2:229)
(திருக்குர்ஆன் 2:229)
தாம்பத்தியம் இன்றி விவாகரத்துச் செய்தால் பாதி மஹர்
அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:237)
மறுமணம் செய்யும் உரிமை
பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப் பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:232)
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 2:234)
(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:235)
விவாகரத்துக்குப் பின் பொருளாதாரப் பாதுகாப்பு
அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை. (திருக்குர்ஆன் 2:236)
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.
(திருக்குர்ஆன் 2:241)
(திருக்குர்ஆன் 2:241)
உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் (இது பற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான்.(திருக்குர்ஆன் 65:6, 7)
பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. (திருக்குர்ஆன் 2:233)
நன்றி:- onlinePJ
இறைவன் நாடினால்-இரண்டாம் பாகம் விரைவில்……..
Subscribe to:
Posts (Atom)
